தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
6/6/2022 4:13:51 AM
தர்மபுரி, ஜூன் 6: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநில சிறப்பு தலைவரும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்முடி மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று தர்மபுரியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பாபுசுந்தரம் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். சுப்ரமணியன், ராதாகிருஷ்ணன், எழிலரசன் முன்னிலை வகித்தனர். பாராட்டு பெற்ற ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, தலைமையாசிரியர்கள் செல்வராஜ், முனீஸ்வரி, எல்லப்பன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். நிகழ்ச்சியில், விழா மலரை முன்னாள் எம்பி., செந்தில் ஆகியோர் இருந்தனர். இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணி, ராஜகோபால், ரவி, முனிமாதன், ஆனந்தன் மற்றும், சீனிவாசன், அப்துல்அஜிஸ், கற்பகம், நாகையா, வெங்கடேசன், மாநில துணை தலைவர் மாதேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!