காரிமங்கலம் அருகே இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்
6/4/2022 2:42:43 AM
காரிமங்கலம், ஜூன் 4: காரிமங்கலம் அருகே இளம்வயது திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.காரிமங்கலம் அருகே கோடியூர் சென்றாயம்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும், பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைவதற்கு 3 மாதங்கள் உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில், அதிகாரிகள் மற்றும் மகளிர் காவல்நிலைய போலீசார், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர், இருவீட்டாரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!