SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு 360 பேருக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

6/4/2022 2:31:47 AM

தேனி, ஜூன் 4: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை யொட்டி அரசு சார்பில் தேனியில் நேற்று நடந்த விழாவில் 360 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்ட அலுவலக கூட்டரங்கில், நேற்று அரசு விழா நடந்தது.

 விழாவிற்கு, கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், திட்ட இயக்குனர் தண்டபாணி, தேனி- அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுப்ரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கவேலு, தேனி அல்லிநகரம் நகர்மன்றத் துணைத் தலைவர் வக்கீல் செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, நலிந்தோர் குடும்ப நல உதவித் தொகை, உழவர் பாதுகாப்பு திட்டம், திருமண உதவித்தொகை என 360 பேருக்கு  ரூ.1 கோடியே 57 லட்சத்து 70 ஆயிரத்து 670 மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு முன்னதாக கலைஞரின் உருவப்படத்திற்கு மாவட்ட கலெக்டர்,  எம்எல்ஏக்கள், உள்ளாட்சி தலைவர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்