SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளுக்கு பயிற்சி

6/4/2022 2:27:05 AM

பரமக்குடி, ஜூன் 4:  பரமக்குடி வட்டம் கமுதக்குடி கிராமத்தில் வேளாண்மை மேலாண்மை முகமையின் கீழ் பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாயிகள் பயிற்சி நடந்தது. பரமக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்  கவிதா மோகன்  முன்னிலை வகித்தார். இதில், ராமநாதபுரம் உயிர் உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர்  அம்பேத் குமார் பயறு வகைப் பயிர்களில் சாகுபடி குறித்தும் இலைவழி நுண்ணூட்டம் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

உழவர் பயிற்சி நிலையம் பரமக்குடி வேளாண்மை அலுவலர்  சீதாலட்சுமி உர நிர்வாகம் பற்றியும் நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வி பிரியதர்சினி ,வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலா தேவி  அவர்கள் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்