விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
6/3/2022 5:12:55 AM
விழுப்புரம், ஜூன் 3: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பன்(45). விவசாயி. இவரது மூத்த மகள் ஷர்மிளா(24). இவருக்கும் திண்டிவனம் அருகே வைரபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக்(28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் ஷர்மிளா சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலைசெய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் நேற்று விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தன் மகள் ஷர்மிளாவை அவரது கணவரே அடித்து கொலை செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து எஸ்பி நாதாவிடம் புகார் மனு அளித்தனர். போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்
திருமணம் செய்ய மறுத்த காதலனை கரம் பிடித்த இளம்பெண்
2 வருடங்களுக்கு பிறகு நடந்தது கோயில் திருவிழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது
மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!