மஞ்சூர் மின் வாரிய முகாமில் நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை
6/3/2022 2:59:23 AM
ஊட்டி: மஞ்சூரில் மின் வாரிய முகாமில் நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டியில் நடந்த நீதி மன்ற திறப்பு விழாவில் அமைச்சர் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசியதாவது: ஊட்டியில் பாரம்பரியமிக்க கட்டிடத்தில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த இடம் போதுமானதாக இல்லா நிலையில், தமிழக அரசு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க காக்காதோப்பு பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்தது. தற்போது இங்கு நீதிமன்றம் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை அமைக்க தடையில்லா சான்று பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குந்தா தாலூகாவிற்குட்பட்ட மஞ்சூரில் இதுவரை நீதிமன்றம் அமைக்கப்படாமல் உள்ளது. இதற்கான நிலம் தேடும் பணிகள் நடந்து வருகிறது. குந்தா மின் வாரியத்திற்குட்பட்ட பகுதியில் இரு கட்டிடங்கள் உள்ளது. இப்பகுதியில் நிரந்தர நீதிமன்றம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, மின்வாரியத்துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதேபோல், குன்னூரிலும் நிரந்தர கட்டிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
மேலும் செய்திகள்
3 சட்டமன்ற தொகுதிகளில் 51.08 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!