SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் துவக்கம்

6/2/2022 5:29:23 AM

நாமக்கல், ஜூன் 2: நாமக்கல் மாவட்டத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், ஒரு மாதம் நடைபெற உள்ளது. கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கண்டறிந்து, ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்த, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலமாக, சிறப்பு வளர்ச்சி கண்காணிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 16,201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து நாமக்கல் மாவட்டம் முழுவதுமாக, கடந்த 24ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது. இங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மருத்துவ அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பரிசோதனை முகாமில் குழந்தைகளின் எடை, உயரம், ஊட்டச்சத்து, உடல்நிலை குறித்த விவரங்கள் முறையாக சேகரிக்க வேண்டும். விவரங்கள் வளர்ச்சி கண்காணிப்பு அட்டையில் அச்சடித்து, பெற்றோரிடம் வழங்கப்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், இதுவரை முகாம்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளின் விவரங்கள், அரசின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்தும், குழந்தைகளின் ஊட்டச்சத்து விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு, சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும், ஊட்டச்சத்து உதவித்தேவைப்படும் குழந்தைகளை தனித்தனியாக கண்டறிந்து, அந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் மருத்துவரிடம், கலெக்டர் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது ஒருங்கிணைந்த வட்டார குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபா, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் காயத்திரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஓடப்பள்ளியில்
மண் பரிசோதனை சிறப்பு முகாம்பள்ளிபாளையம், ஜூன்2:பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பள்ளிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயில் வளாகத்தில் இன்று (2ம்தேதி) காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் முகாம் நடைபெறுகிறது. எனவே, பயிர் சாகுபடியை துவக்கவுள்ள விவசாயிகள், தங்களுடைய வயலின் மண் மற்றும் நீரினை ஆய்வு செய்து, அதற்கேற்ப உரமிட்டு செலவை குறைப்பதோடு, மண்ணின் வளத்தை பாதுகாத்துக்கொள்ளும்படி கொள்ளப்படுகிறது. மண் மற்றும் நீர் மாதிரி கட்டணமாக ஒன்றுக்கு ₹20 செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்