கோயில் திருவிழா
5/28/2022 6:48:00 AM
உத்தமபாளையம், மே 28: உத்தமபாளையம் அருகே, கோகிலாபுரத்தில் பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மந்யம்மன் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதல்நாள் முல்லைப் பெரியாற்றில் அம்மனுக்கு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து 2வது நாள் அதிகாலையில் அம்மனுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். இதை தொடர்ந்து கோவில்வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்களை வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று முளைப்பாரி எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து கட்டிய சுவரை இடிக்கும் பணி துவக்கம்
நடுவனூரில் கிடா கறி விருந்து
பழநி வழித்தடத்தில் நிறுத்திய ரயில்களை இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை
கொடைக்கானலில் அட்டகாசம் செய்த குரங்குகள் ‘அரஸ்ட்’
தேவதானப்பட்டியில் காங்கிரசார் நடை பயணம்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!