கூடலூர் நகராட்சியில் மழைக்காலங்களில் சேதமடைந்த பாலங்கள், சாலைகள் ஆய்வு
5/28/2022 6:44:23 AM
கூடலூர், மே 28: கூடலூர் நகராட்சியில் கடந்த 2020 ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்த பாலங்கள், சாலைகளை நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முதல் மைல் கோல்டன் அவென்யூ, புறமன வயல், துப்புகுட்டி பேட்டை, மங்குழி, வேடன் வயல் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பாலங்கள், சாலைகள், நடைபாதைகள் சேதமடைந்தன. இது தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் சென்னையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையனை நேரில் சந்தித்து அறிக்கை அளித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன், பொறியாளர் ஆரி ஆகியோர் நேற்று முன்தினம் கூடலூர் வந்து நகராட்சி ஆணையர் பொறுப்பு காந்திராஜ், பொறியாளர் பார்த்தசாரதி, பணி மேற்பார்வையாளர் சிவபாக்கியம் ஆகியோருடன் துப்புகுட்டிபேட்டை, எம்ஜிஆர் நகர், முதல்மைல், வேடன்வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த பாலங்கள், சாலைகளை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் இப்பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான திட்ட அறிக்கையைப் பெற்று நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
ஆய்வின்போது நகராட்சி தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ், வார்டு உறுப்பினர்கள் சத்தியராஜ் சத்தியசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
போதை பழக்கத்தால் எதிர்காலம் பாழாகி குடும்பம் அழியும் ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு
ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன
பர்லியாறு கடைகளுக்கான டெண்டர் ஒத்திவைப்பு
மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடர்கிறது மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர் - கோவை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா பூத்துள்ளது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!