SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

5/28/2022 1:39:00 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட  திமுக ஆலோசனை கூட்டம் நேற்று காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹவுசில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், காயத்திரி ஸ்ரீதரன், ம.இராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் ப.நரேஷ்குமார், காக்களூர் த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், கோடுவெளி எம்.குமார், ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேறறார்.

கூட்டத்தில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞரின் கம்பீரமான திருவுருவச் சிலையை இன்று மாலை 5.30 மணியளவில் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளதால் மத்திய மாவட்டத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு, ஜூன் 3 ஆம் தேதி அன்று நமது  மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் கழக கொடியை ஏற்றி, இனிப்புகளை வழங்கி எழுச்சியுடன் கொண்டாடுவது.

மத்திய  மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம், கருணை இல்லம், பார்வையற்றோர் பள்ளி, மாற்றுத் திறனாளிகள் தங்கும் இல்லம், மனநலம் குன்றியோர் தங்கும் விடுதி, தொழுநோயாளிகள் இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள ஆதரவற்றோர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்குவது என்றும், மேலும் இரத்ததான முகாம், மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்துவது, மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலை, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது என்று தீர்மானம் நிறைவற்றப்பட்டது.

இதில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயக்குமார், மாநகர, ஒன்றிய, நகர செயலாளர்கள் டி.தேசிங்கு, புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன்,  என்.இ.கே.மூர்த்தி, ஜி.ஆர்.திருமாலை, ஜி.ராஜேந்திரன், பேபிசேகர், பொன்.விஜயன், ஜி.நாராயண பிரசாத், தி.வை.ரவி, தி.வே.முனுசாமி, தங்கம் முரளி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பிரபுகஜேந்திரன், பூவை ப.ச.கமலேஷ், ஏ.ஜெ.பவுல், சங்கீதா சீனிவாசன், ஏ.ஜெ.ரவி, ஒ.ஆர்.நாகூர்கணி, என்.பி.மாரிமுத்து, எஸ்.அசோகுமார், ஈக்காடு கே.முகமது ரஃபி, ஏ.ஜனார்த்தனன், ஒன்றிய, நகராட்சி பெருந்தலைவர்கள் ஜெயசீலி ஜெயபாலன், உஷாராணி ரவி, காஞ்சனா சுதாகர், உ.வடிவேல், துணை தலைவர்கள் எம்.பார்க்கத்துல்லாகான்,  ஸ்ரீதர், பரமேஸ்வரி கந்தன், சரளா நாகராஜ், மண்டல குழு தலைவர் அமுதா பேபிசேகர், ஜோதிமணி நாராயண பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

 • same-sex-27

  மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்