மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
5/27/2022 5:54:16 AM
சங்ககிரி, மே 27: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இது காணொலி வாயிலாக சங்ககிரி கத்தேரி ஊராட்சி, தேவண்ணக்கவுண்டனூர், மோரூர் மேற்கு ஊராட்சி, சின்னாக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில், சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) தேசிங்கு ராஜன் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள், வரப்பு பயிர், உளுந்து காய்கறி விதைகள், மண்புழு உரங்கள் மற்றும் மானிய விலையில் பேட்டரி தெளிப்பான், கை தெளிப்பான் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்செல்வி சண்முகம், கலா மோகன்ராஜ், சாரதா பழனியப்பன், துணை தலைவர் கவிதாமேரி தர்மராஜ், வேளாண்மை உதவி அலுவலர் முரளிதரன், சீனிவாசன், தோட்டக்கலை உதவி அலுவலர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!