குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி கேட்டு தந்தை கண்ணீர் மனு
5/27/2022 5:54:10 AM
சேலம், மே 27: மேட்டூர் சாணரப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு தரணிஷ் (6) ஆண் குழந்தை உள்ளது. ரமேஷ் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது குழந்தை தரணிசுக்கு இடதுபக்க மூளை செயலிழந்து விட்டதால் உயிரை காப்பாற்றுவதற்காக ₹15 லட்சம் வரை கடன் வாங்கி சிகிச்சை அளித்தோம். இதற்காக வீடு, நிலத்தை விற்றுவிட்டோம். இதனால் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமமாக உள்ளது. குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளோம். ஒரு ஆண்டு சிகிச்சை அளித்தால் காப்பாற்றலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு ₹10 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, எனது குழந்தையின் மருத்துவத்திற்கு முதல்வரும், மாவட்ட நிர்வாகமும் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!