நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; 3 பேருக்கு வலை
5/27/2022 5:53:51 AM
சேலம், மே 27: சேலம் நரசோதிப்பட்டி பெருமாள்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கலா(55). நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், அங்குள்ள டவுன் பிளான் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அங்கு 3 பேர் டூவீலரில் நின்று கொண்டிருந்தனர். திடீரென அதில் ஒருவன், கலா அணிந்திருந்த 4.5 பவுன் தங்க தாலியை பறித்தான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தாலியை இறுகப்பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். அவர் ஜாக்கெட்டுடன் தாலியை ஊக்கால் மாட்டி வைத்திருந்தார். தாலியை ஒரு கையாலும், இன்னொரு கையால் நகை பறித்த நபரையும் பிடித்துக்கொண்டு அலறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கலாவின் கழுத்தை நெரித்தார். சத்தம் கேட்டு, அருகாமை வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அதற்குள் பாதி நகையை பறித்துகொண்டு, கலாவை கீழே தள்ளி விட்டு, தயாராக இருந்த டூவீலரில் தப்பியோடி விட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த சூரமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் நகை பறிப்பு நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!