SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநியில் கூண்டு வைத்து பறவைகளை பிடித்தவர் கைது ரூ.25 ஆயிரம் அபராதம்

5/27/2022 5:20:08 AM

பழநி, மே 27:பழநியில் கூண்டு வைத்து பறவைகளை பிடித்த வேட்டைக்காரரை வனத்துறையினர் கைது செய்தனர்.     திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி வனச்சரகம். இவ்வனச்சரகத்தில் வரிப்புலி, சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவு உள்ளன. இவ்விலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குமார சமுத்திரகுளத்தில் பறவைகளை கூண்டு வைத்து பிடித்து கொண்டிருந்த ஆவணி மூல வீதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு (46) என்பவரை பழநி வனத்துறையினர் செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 11 முனியாசு பறவைகள், 1 கூண்டு, 2 வலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வன உயிரின வழக்குபதிவு செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வனத்தில் இருந்து பிடித்து வரும் பறவைகளை வாங்கும் பொதுமக்கள் மீதும் வனச்சட்டம் பாயும் என வனச்சரகர் பழனிக்குமார் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்