போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
5/27/2022 5:19:44 AM
மதுரை, மே 27: அரசு போக்குவரத்துக் கழக ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 77 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத்தலைவர் பிச்சைராஜன் தலைமை தாங்கினார். மாநகர துணை மேயர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கை தொடர்பான மனு கலெக்டர் அனீஷ்சேகரிடம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!