ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
5/27/2022 5:15:17 AM
கோவை, மே 27: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பு மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கினைப்பு குழுவின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அரங்கநாதன், சேதுராமன், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஓய்வூதியம் உயர்த்த வேண்டும். ஓய்வூதிய கால பணப்பயண்கள் உடனடியாக வழங்க வேண்டும். 77 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...