SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசை கண்டித்து கம்யூ. கட்சிகள் ஆர்ப்பாட்டம்

5/27/2022 3:46:24 AM

தரங்கம்பாடி, மே27: பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உயர்வை கண்டித்து தரங்கம்பாடி அருகே ஆயப்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்களின் மீதான வரிகளை கைவிட வேண்டும். பருப்பு, எண்னெய் உள்ளிட்ட அணைத்து அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் கோபிநாத் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்