கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பதை கண்டித்து கிராம மக்கள் மறியல்
5/27/2022 3:46:18 AM
மயிலாடுதுறை, மே 27: கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பதை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து ஒருசில இடங்களில் சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை அருகே கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடுவங்குடி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை காவல்நிலையத்தில் சாராய வியாபாரிகள் ராணி, மயிலம்மாள் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த வருடத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!