SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெறலாம்

5/27/2022 3:46:10 AM

மயிலாடுதுறை, மே 27: மயிலாடுதுறை கலெக்டர் லலிதா தெரிவித்திருப்பதாவது: புதியதாக தொழில்களை துவங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிடவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் கிராமத் தொழில்கள் வாரியம், மற்றும் கயிறு வாரியம் ஆகிய அலுவலகங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குறுந்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். கடன் பெற தேவையான தகுதிகள் 18 வயதுக்கு மேல். கல்வித்தகுதி, உற்பத்தி தொழில் திட்ட மதிப்பீடு 10 லட்சத்துக்கு மேலும் சேவைத் தொழில் திட்ட மதிப்பீடு 5 லட்சத்துக்கு மேலும் இருப்பின் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

அதிகபட்ச திட்ட மதிப்பீடு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் திட்ட மதிப்பீடாக வழங்கப்படுகிறது. மேலும், திட்ட முதலீட்டில் விளிம்புத் தொகையாக பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினர் தாழ்த்தப்பட்டோர். பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்) 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் அனைத்து லாபகரமான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த சுற்றுப்புற சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கச்சேரி சாலை, (செந்தில் பைப் இரண்டாம் தளம்) மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்