ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
5/26/2022 5:59:46 AM
திண்டுக்கல், மே 26:உத்தரப்பிரதேச மாநிலத்தில் கியான் வாபி மசூதி சீல் வைத்ததை கண்டித்து, திண்டுக்கல்லில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகமது அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநகர தலைவர் சதாம் உசேன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பக்ருதீன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வர் முகமது யஸ்யா பேசுகையில், ‘‘உத்தரப்பிரதேசத்தில் கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அன்வர், பொதுச்செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் அமானுல்லாஹ் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
உலமாக்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல், வேடசந்தூரில் 850 கிலோ குட்கா பறிமுதல்
உணவு பாதுகாப்பு தினவிழா
குட்கா பறிமுதல்
ரயிலில் அடிபட்டு மனநலம் பாதித்தவர் பலி
விபத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!