ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
5/26/2022 12:21:05 AM
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த எரும்பி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. அங்குள்ள தொடக்கப் பள்ளியில் போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் தேர்தல் நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சங்கரன் என்பவர் தேர்தல் தேதி முறையாக அறிவிக்காமல் தேர்தல் நடத்துவதாக தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரம் வாக்குப் பதிவு தடைப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. விவசாயிகள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு செய்தனர்.
மதியம் 2 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்து வாக்கு பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டு ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலகத்தில்தாசில்தார் தமயந்தி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. தலைவராக திமுகவை சேர்ந்த பொன்னுரங்கம் வெற்றி பெற்றார்.
மேலும் செய்திகள்
கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ஊராட்சி தலைவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
மீன்பிடி மற்றும் மீனவர் நலன் பல்நோக்கு பண்ணை குட்டைக்கு ஒப்புதல் கலெக்டர் அறிவிப்பு
உளுந்தை, தொடுகாடு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம்
சாலையில் பிறந்தநாள் கொண்டாடியபோது இரு தரப்பினர் திடீர் கோஷ்டி மோதல் திருவள்ளூர் அருகே பரபரப்பு
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!