நத்தத்தில் பகவதி அம்மன் கோயில் திருவிழா
5/25/2022 5:54:28 AM
பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
நத்தம், மே 25: நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. மறுநாள் காலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சந்தன கருப்பு சுவாமி கோயிலில் இருந்து பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்ததையடுத்து பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மே 20ம் தேதி காலையில் கோயில் முன்பாக சிறப்பு அன்னதானம் நடந்தது. அன்று மாலை 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்ததையடுத்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று காலையில் அம்மன் குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம், சந்தன குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது . பின்னர் மாலையில் முளைப்பாரி ஊர்வலம், தொடர்ந்து இரவு அம்மன் வாண வேடிக்கையுடன் தங்கரதத்தில் நகர்வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்/ இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா, அரண்மனை பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ராமநாதன், திருவம்பலம், சந்தானம், சுந்தரராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மண்சரிந்த இடத்தில் பணிகள் முடிந்தது தாண்டிக்குடி மலைச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது
சுதந்திர தினத்திற்கு சூப்பர் ஏற்பாடு மலைக்கோட்டையில் ஜொலிக்கும் மூவர்ண கொடி
விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி: வேடசந்தூர் கோர்ட் அதிரடி
பழநி அருகே பைனான்சியர் கொலையில் மனைவி உள்பட 4 பேர் கைது: 6 மாதங்களுக்கு பின் நடவடிக்கை
ஆடி வெள்ளி அன்னதானம்
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!