மும்முனை இணைப்புக்கு லஞ்சம் மின்வாரிய பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
5/25/2022 12:04:36 AM
சென்னை: மும்முனை இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு 4 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது வீட்டிற்கு மும்முனை இணைப்பு கோரி அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி ₹1000 லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அரிதாஸ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அரிதாஸிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு மறைந்திருந்தனர். அப்போது மணியை கையும் களவுமாக அவரை மடக்கி பிடித்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி வேலரசு குற்றம் நிரூபணமானதால் மின்சார வாரிய உதவி பொறியாளர் மணிக்கு 4ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ₹40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார்.
மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மடிப்பாக்கம் சபரி சாலையில் குப்பை குவியலால் துர்நாற்றம்; அகற்ற கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு; கோயில் அகற்றம் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் இடிப்பு
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
சென்னை ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க தனி அலுவலர் நியமனம்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!