கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
5/24/2022 4:21:18 AM
நெல்லிக்குப்பம், மே 24: நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் இ.ஐ.டி பாரி அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு அறிவித்த கரும்பு ரகங்களை நடவு செய்தால் ஆலை நிர்வாகமே பதிவு செய்திடு, எரிந்த கரும்புக்கு பிடித்தம் செய்த பணத்தை திரும்ப கொடுத்திடு. கரும்பில் கழிவு என்ற பெயரில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.ஐ.டி பாரி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார்.
விவசாயிகள் சங்க தலைவர் சம்பத்குமார், இ.ஐ.டி பாரி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவிந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், சுப்புரமணியன், ஜெயதேவன், தர், சரவணன், ஜெகதீசன், சாமிப்பிள்ளை, வி.சி.க நகர செயலாளர் திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்
திருமணம் செய்ய மறுத்த காதலனை கரம் பிடித்த இளம்பெண்
2 வருடங்களுக்கு பிறகு நடந்தது கோயில் திருவிழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது
மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!