கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
5/21/2022 7:07:08 AM
கடலூர், மே 21: கொடுஞ் செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி சக்திகணேசன் தலைமையில், போலீசார் கொடுஞ் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில், தளராத நம்பிக்கையுடைய, இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என்றும், எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும்,
மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும், ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை, எதிர்த்துப் போராடுவோம். என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், இளங்கோவன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், ஆயுதப்படை ஆய்வாளர் விஜயகுமார், காவல் நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவக்குமார் மற்றும் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!