முதல்வருடன் செல்பி எடுத்த பெண்கள்: சாலையோர கடைகளில் காய்கறி விற்பனை அதிகரிப்பு
5/21/2022 6:59:20 AM
ஊட்டி, மே 21: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்ட துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி துவங்கியுள்ள நிலையில் மழை பெய்து வருவதால் குளு குளு காலநிலையை அனுபவித்த படியே சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இங்கு கிடைக்க கூடிய நீலகிரி தைலம், தேயிலை தூள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதனால் ஊட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்காகவே சிலர் சாலையோரங்களில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் ேபான்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்களிடம் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக மார்க்கெட்டைவிட விலை குறைவாகவும், பிரஷ்ஷாகவும் கிடைப்பதால் அதிகளவு வாங்கி செல்கின்றனர். இதனால் ஊட்டி - கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா செல்லும் சாலைகளில் சாலையோர காய்கறிகள் வியாபாரம் அமோகமாக நடக்கிறது. இதனால் சிறு விவசாயிகளுக்கு வருமானமும் கிடைத்து வருகிறது.
மேலும் செய்திகள்
போதை பழக்கத்தால் எதிர்காலம் பாழாகி குடும்பம் அழியும் ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு
ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன
பர்லியாறு கடைகளுக்கான டெண்டர் ஒத்திவைப்பு
மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடர்கிறது மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர் - கோவை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா பூத்துள்ளது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!