ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.7.18 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு
5/21/2022 6:56:01 AM
தேனி, மே 21: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்த அழகர்சாமி மனைவி ராஜலட்சுமி. இவரது செல்போனுக்கு, பல செல்போன் எண்களில் தொடர்பு கொண்டவர்கள், ‘ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா மெகானிக்கல் துறையில் இருந்து பேசுவதாகவும், ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு உள்ளது என ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய ராஜலட்சுமி தனது மகனுக்கு வேலை தரும்படி கேட்டுள்ளார். இந்த பணிக்காக பல தவணைகளாக செல்போன் எண்களில், தொடர்பு கொண்டவர்கள் அளித்த வங்கிக் கணக்குகளில் ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் வரை ராஜலட்சுமி பணம் அனுப்பினார்.
ஆனால், வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பணம் பறிப்பதிலே குறியாக இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த ராஜலட்சுமி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், சைபர் கிரைம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன், ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த, செல்போன் எண்களை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த செல்போன் எண்களில் பேசியவர்கள் யார், யார்? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்கினால் வனப்பகுதியை விட்டு வெளியேற தயார் மேகமலை விவசாயிகள் 4 பேர் மனு
கார் விபத்தில் இளைஞர் பலி
கோயில் கும்பாபிஷேகம்
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
சண்டையை தடுத்ததால் 2 பேர் மண்டை உடைப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!