SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 நாளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு சிவகங்கை நகர்மன்ற தலைவர் அறிவிப்பு

5/21/2022 6:55:16 AM

சிவகங்கை, மே 21: சிவகங்கை நகர்மன்ற கூட்டம் தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடந்தது. ஆணையாளர்(பொ) பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் அயூப்கான், ராஜா, அன்புமணி, சரவணன், காந்தி, புஷ்பம், சேதுநாச்சியார், கீதா, ராஜேஸ்வரி, வண்ணம்மாள், பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கழிவு நீர் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றாமல் காலம் தாழ்த்துகின்றனர். அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் முழுவதும் பல்வேறு வார்டுகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோகலே ஹால் தெருவில் உள்ள பழமை வாய்ந்த நூலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி நூலகத்தை தற்காலிகமாக இயக்க அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் புதிதாக தயார் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.

பதிலளித்து நகர்மன்றத்தலைர் துரைஆனந்த் பேசியதாவது: நகராட்சி பணியாளர்கள் வரும் போது குப்பைகளை கொடுக்காமல் தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். உழவர் சந்தை அருகே ரூ.2 கோடி மதிப்பிலான இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க ரூ.80 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. 10 நாட்களில் குடிநீர் பிரச்சினைகள் சரிசெய்யப்படும். இவ்வாறு பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HOTDOGGG111

    ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்