தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றால் நடவடிக்கை
5/21/2022 6:54:56 AM
ஈரோடு,மே21: தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருள்களை விற்பனை செய்தால் அந்த கடை திறக்க தடையாணை பிறப்பிக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புகையிலை, நிக்கோடின் கலந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வது, அதை எடுத்துச் செல்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வதற்கு தட விதிக்கப்பட்டுள்ளது.மீறி விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 2 முறை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். 3வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன், அந்தக்கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
மேலும், 2 கிலோவுக்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட பொருள் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அந்தக் கடையும் மூடப்படும். மேலும், ஏற்கனவே தடைசெய்யப்பட்ட புகையிலை, நிக்கோடின் கலந்து உணவுப் பொருள் விற்பனை குறித்து வழக்குப் பதிவாகி இருந்தால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பொருள்கள் விற்பனை குறித்து தெரியவந்தால் 94440 42322 என்ற எண்ணில் தெரித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!