காஞ்சிக்கோயில் ஸ்ரீசீதேவி அம்மன் கோயில் தேர்த்திருவிழா
5/21/2022 6:54:48 AM
ஈரோடு,மே21: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலில் உள்ள ஸ்ரீசீதேவி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மே 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கிராமசாந்தி, கொடியேற்றம், தீர்த்தம் எடுத்து வருதல், குண்டம் இறங்குதல், பொங்கல் வைக்கும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் காஞ்சிக்கோயில் ஸ்ரீசீதேவி அம்மன் நல அறக்கட்டளைதாரர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து இன்று தேர் நிலை சேருதல், நாளை (22ம் தேதி) மஞ்சள் நீராட்டு மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!