தீ விபத்தில் கார், பொருட்கள் நாசம்
5/21/2022 6:54:23 AM
ராமநாதபுரம்/கீழக்கரை, மே 21: ராமநாதபுரத்தில்அரசு பள்ளி ஆசிரியரின் கார் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து நாசமானது. ராமநாதபுரம் அய்யாக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் திருப்புல்லாணி அருகே மேல புதுக்குடி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நின்ற இவரது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தினர் தகவல்படி ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்க இயலாமல் போனது. இதனையடுத்து விரைவு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரம் போராடி தீயணைக்கப்பட்டது.
இதில் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரை சேர்ந்த முனியசாமி என்பவர் கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10,000 எரிந்து சேதமானது.
மேலும் செய்திகள்
பால விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
இன்று மின்தடை
ஆனந்தூரில் மதநல்லிணக்க கும்பாபிஷேக விழா நீர், மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
கமுதி அருகே கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு
மக்களின் சிரமத்தை போக்க தொண்டியை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!