மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்
5/21/2022 6:50:01 AM
மதுரை, மே 21: மதுரை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பண்டியன், மாநகராட்சி கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர் விமல், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர்கள் மணிசேகரன், போஸ் வரவேற்றனர்.
தலைமை கழக பேச்சாளர் கவிஞர் நன்மாறன் பேசுகையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தியதால் தமிழர்கள் படிக்க முடிந்தது. கலைஞரின் அடையாளம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அடையாளம் திராவிட மாடல் ஆட்சி. அவர் எதிர்காலத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக வருவார்’ எனப்பேசினார். தலைமைக்கழக பேச்சாளர் கரூர் முரளி பேசுகையில், உழைப்புக்கு பெயர் பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். எடப்பாடி முதல்வராக இருந்த போது உச்சத்தில் இருந்த கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால் பலி எண்ணிக்கை அதிகரித்தது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் வந்தவுடன், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கி, உள்நாட்டிலேயே உற்பத்திக்கு வழிவகுத்து கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றினார்’ என்றார். இதில் பகுதி செயலாளர்கள் ஈஸ்வரன், கிருஷ்ணபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, வேட்டையன், தனபால், கவுன்சிலர்கள் சிவா, ரவிச்சந்திரன், இந்திராகாந்தி, காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!