லாரி-வேன் மோதி 3 பேர் படுகாயம்
5/21/2022 6:46:30 AM
சின்னாளபட்டி, மே 21: விருதுநகரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் ராமர் (45). இவர், சிவகாசியிலிருந்து பால் பாக்கெட் கவர்களை பிக்அப் வேனில் ஏற்றிக் கொண்டு, கோவை மாவட்டம் அன்னூர் செல்ல, திண்டுக்கல்-பழனி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெரியகோட்டை செங்கல் சூளையிலிருந்து செங்கல் ஏற்றி வந்த லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இவர், ராஜக்காபட்டி பிரிவில் நின்றிருந்த பஸ்சை ஓவர்டேக் செய்யும்போது எதிர்பாராத விதமாக பிக்அப் வேன் மோதினார். இந்த விபத்தில் பிக்அப் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. மேலும், லாரி அருகில் இருந்த ஒர்க்ஷாப்பில் புகுந்தது.
இதில், பிக்அப் வேன் டிரைவர் ராமர் மற்றும் கிளீனர் வீரபாண்டிக்கு தலை மற்றும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. லாரி டிரைவர் செல்வராஜூக்கு முதுகு, கால்களில் காயங்கள் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெட்டியார்சத்திரம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
உலமாக்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல், வேடசந்தூரில் 850 கிலோ குட்கா பறிமுதல்
உணவு பாதுகாப்பு தினவிழா
குட்கா பறிமுதல்
ரயிலில் அடிபட்டு மனநலம் பாதித்தவர் பலி
விபத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!