போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
5/21/2022 1:27:42 AM
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ஈ.வெ.ரா சாலையில் தாசப்பிரகாஷ் சந்திப்பில் காலை நேரங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை, ஈ.வெ.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. ஈ.வெ.ரா சாலை மற்றும் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக செல்ல முடியாது.
* புரசைவாக்கத்தில் இருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு வழியாக வரும் வாகனங்கள் தாசப்பிரகாஷ் சந்திப்பை நோக்கி ராஜா அண்ணாமலை சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி நாயர் பாயின்ட் சந்திப்பில் நேராகவோ, வலது மற்றும் இடது புறமாக திரும்பியோ செல்லலாம்.
* காசி பாயின்ட் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, பிள்ளையார் கோயில் தெரு, மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் காசி பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திருப்பி சுமார் 160 மீட்டருக்கு சென்று காசி மேம்பாலம் அடியில் யூடர்ன் செய்து, தங்கள் இலக்கை அடையலாம். அசோக்நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தம்மன் கோயில் தெரு வழியாக அசோக் நகர் 11வது அவென்யூ செல்லலாம்.
* மெக்கானிக்கல் சாலை சேத்துப்பட்டு சந்திப்பில் மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க, நாளை முதல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மெக்கானிக்கல் சாலை, டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை, மெக்கானிக்கல் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்புக்கு செல்லலாம்.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!