மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் குளம் அமைக்க மானியம் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்
5/21/2022 1:20:54 AM
செங்கல்பட்டு, மே 21: செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் குளம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021- 2022ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் (PMMSY) மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு அலகு உயிர் கூழ்ம திரள் குளம் அமைக்க மற்றும் உள்ளீட்டுக்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில், பொதுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600 115 (அலுவலக தொலைப்பேசி 044-24492719 செல்போன் 79045 50525, 98946 21231) அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?
தாம்பரம் மாநகராட்சியில் முறையான பராமரிப்பின்றி காட்சி பொருளாக மாறிய பொது கழிவறைகள்: பொது மக்கள் தவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை: விவசாயிகள் புகார்
மதுரை - சென்னை தேஜாஸ் ரயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் கோரிய கடிதங்களுக்கு ஒப்புதல் இல்லை
மதுராந்தகம் அருகே தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் பணி: உழவர் நலத்துறை செயலர் ஆய்வு
கோவளம் ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!