ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு பைக் மீது லாரி மோதி சிறுவன் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
5/21/2022 1:20:36 AM
ஸ்ரீபெரும்புதூர், மே 21: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று முன்தினம் இரவு பைக் மீது லாரி ேமாதியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். சம்பவ இடத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூரை சேர்ந்தவர் அஜய் (25). நேற்று முன்தினம் மாலை அஜய், தனது அக்கா மகன் புகழரசு (12) என்ற சிறுவனுடன் பைக்கில், காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டையில் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். வாலாஜாபாத் சாலை வழியே சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
குன்னம் பகுதியில் சாலை வளைவில் பைக் திரும்பியபோது, எதிரே கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே, லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், 2 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழரசு நேற்று காலை பரிதாபமாக பலியானான். அஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின்படி சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று காலை குன்னம் பகுதியில் உள்ள அபாயகர சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
வாடகை கொடுக்க முடியாததால் விரக்தி: சமையல் தொழிலாளி தற்கொலை
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,927 வழக்குகளுக்கு தீர்வு
காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!