சென்னை பல்கலை தரவரிசை பட்டியலில் வித்யாசாகர் மகளிர் கல்லூரி முதலிடம்: மாணவிகளுக்கு கவர்னர், முதல்வர் பாராட்டு
5/21/2022 1:20:18 AM
செங்கல்பட்டு, மே 21: சென்னை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த வித்யாசாகர் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது ஆண்டு பட்டமளிப்பு விழா கடந்த 16ம் தேதி சென்னை, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இதில் சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் அளவில், தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலைக்கல்லூரி முதுகலை வணிகவியல் துறை மாணவி சந்திரிகாதேவி, முதுகலை தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி காஜல் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் பட்டங்கள் வழங்கி கவுரவித்தனர்.
இதில், உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக அளவிலான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த 2 மாணவிகளை, வித்யாசாகர் மகளிர் கல்வி குழும தாளாளர், நிர்வாகிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது
கலைஞரின் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதி ஊர்வலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அடையாறு ஆற்றங்கரையையொட்டி ரூ. 2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பறித்த தம்பதி மனைவி கைது கணவனுக்கு வலை
பாலூரில் ரயில் மறியலால் பரபரப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!