சோழவரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்
5/21/2022 12:55:49 AM
புழல், மே 21: சோழவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன், அமிர்தமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், கலைஞரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர் சந்திரசேகர் பேசுகையில், `நத்தம், சின்னம்பேடு, மல்லியங்குப்பம் ஆகிய கிராமங்களில் புதிதாக பள்ளி கட்டடம் கட்ட வேண்டும். சின்னம்பேடு ஏரியிலிருந்து பெரிய காலனி வழியாக செல்லம் பொதுப்பணித்துறை கால்வாயை சீரமைக்க வேண்டும்’ என்றார்.
கவுன்சிலர் பிரகாஷ் பேசுகையில், `அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். இந்த பகுதியில் அனுமதி இன்றி மருத்துவ கழிவுகள் பிரித்து எடுப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது’ என பேசினார். இதில் கவுன்சிலர்கள் ஷகிலா சகாதேவன், மாலதி மகேந்திரன், ரேவதி துரைவேல், ருக்மணி ரவிச்சந்திரன், கோமதி சீனிவாசன், கனிமொழி சுந்தரமூர்த்தி, சுகவேணி முருகன், கர்ணன், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.06% தேர்ச்சி
ராமாபுரத்தில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்ககோரி தொடர் முழக்க போராட்டம்
பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் 37 மீனவ குடும்பங்கள் மீன்பிடிக்க செல்ல உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: போலீசார் உறுதி
எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை கட்டாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருவள்ளூர் அருகே அம்மன் கோயில்களை உடைத்து 24 சவரன், ரூ5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!