அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்
5/20/2022 6:58:37 AM
திருச்சி, மே 20: திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பெரியார் நகரில் கடந்த மாதம் 27ம் தேதி கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து வைத்தான் (எ) சுதாகர் (42) என்பவரை காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் சுதாகரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். இதில் சுதாகர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கடந்த மாதம் 24ம்தேதி ரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெருவில் முன்விரோதம் காரணமாக விளையாட்டு வீரரை கொலை செய்ய முயன்ற சுரேஷ் (எ) சுளுக்கி சுரேஷ் (21) என்பவரை ரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் கைது செய்து சிறையில் அடைத்தார். இதில் சுரேஷ் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
சிறையில் உள்ள இருவரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் எண்ணம் உடையவர்கள் என்பதால் சிறையில் உள்ள சுதாகர் மற்றும் சுரேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், ரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் இருவரும் கமிஷனருக்கு தனிதனியே பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன், சிறையில் உள்ள சுதாகர் மற்றும் சுரேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் அதற்கான நகலை போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தமிழகம் வரும்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எச்சரிக்கை: திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றம், கிழிப்பு
வங்கியில் பணம் எடுத்து செல்வோரிடம் வழிப்பறி: வாலிபர் கைது: ரூ.4.80 லட்சம் மீட்பு
திருச்சியில் செல்போன், ரொக்க பணம் முகமுடி நபர்கள் வழிப்பறி
சிறுகமணியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி
திருச்சி பஞ்சப்பூர் ஜங்ஷனில் புதிதாக திறக்கப்பட்ட காவல் சோதனை சாவடியால் குற்ற சம்பவங்கள் குறைந்தது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!