திருவாரூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
5/20/2022 6:55:58 AM
திருவாரூர், மே 20: திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெறுவதாக செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் துர்காலயா சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (20ம் தேதி) நடைபெறுகிறது. அதன்படி காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் விண்ணப்பமாக அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஜெராக்ஸ்மிஷினை பழுதுநீக்கி தராத நிறுவனத்திற்கு ரூ.3லட்சம் அபராதம்: திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் வழங்ககோரி ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கல்வி நிறுவனங்கள் அரசின் கொரோனா தடுப்பு முறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரியில் படிக்கும் பிசி, எம்பிசி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் புதிய பேருந்து நிலைய டூ வீலர்கள் ஸ்டாண்டில் இட நெருக்கடி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!