பெரம்பலூர் மாவட்டத்தில் 5,947 விவசாயிகளிடமிருந்து 19,176 மெ.டன் நெல் கொள்முதல்
5/20/2022 6:42:16 AM
பெரம்பலூர், மே 20: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கை.களத்தூர் ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்மு தல் நிலையத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் சரியான தேதியில் நெல் கொள்மு தல் செய்ய வேண்டும். அதற்குண்டான தொகையினை விவசாயிகளுக்கு தாமதமாக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவினை சரியான முறையில் அளக்க வேண்டும். விவசாயிகளு க்கு வழங்கப்படும் தொகை எடைக்கேற்ப சரியான முறையில் வழங்கப்படுகிறதா என அதற்கான அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நே ரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலைய ங்கள் ஆரம்பிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலையாக நெல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2,060ம், நெல் பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015 வழங்கப்படுகிறது. 2021-22ம் பருவத்தில் ஆரம்பிக்கப்பட்ட 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மொத்தம் 9,176.400 மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
5,947 விவசாயிகள் தங்களது நெல்லினை அரசுக்கு விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். இம்மாதம் 13ம் தேதிவரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உண்டான தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!