SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை முதல்வருக்கு மீனவர் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

5/20/2022 6:40:47 AM

நாகை,மே20: மீன் வளத்தையும் அதை நம்பி வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியூசி மீனவர் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னதம்பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஏஐடியூசி மீனவர் தொழிலாளர் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மீனவர் குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல் வளத்தையும், கடல் வளத்தை சார்ந்து இருக்கக்கூடிய சதுப்புநில காடுகளையும், மீன் வளத்தையும் அதை நம்பி வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திட்டமான கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்கள், மீன்பிடி வலைகள், மற்றும் மீன்பிடி சாதனங்களை கொள்ளையடித்துச் செல்லும் கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடற் கொள்ளையர்களிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே மீன்பிடி பாசி குத்தகையை வழங்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வங்கிகடன் மீன் விற்பனையாளர் களுக்கும் வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்