SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

₹1.40 லட்சம் மதிப்பில் பன்றி வாங்கி மோசடி

5/20/2022 6:24:14 AM

விருதுநகர், மே 20: விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியம் ரெட்டியபட்டியை சேர்ந்த மாடத்தி அளித்த மனுவில், கூலி வேலை செய்து, பன்றி வளர்ப்பு மற்றும் விற்பனை செய்கிறேன். கடந்த பிப்.2ல் துலுக்கன்குறிச்சியை சேர்ந்த ஒரு நபர் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 20 பன்றிகளை வாங்கி சென்றார். ரூ.10 மட்டும் கொடுத்து விட்டு, இரு தினங்களில் முழுத்தொகை தருவதாக கூறி சென்றார். இதற்கு முன் இருமுறை வாங்கிய பணத்தை முறையாக திருப்பி கொடுத்ததை நம்பி 20 பன்றிகளை கொடுத்தோம். ஆனால் தரவேண்டிய தொகையான ரூ.1.40 லட்சத்தை தரவில்லை.

வீட்டிற்கு சென்று தரவேண்டிய தொகையை கேட்டால் பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். கணவர் மாடசாமி சென்று கேட்டதற்கு கத்தியை எடுத்து குத்தாம விடமாட்டேன் என தாக்க வருகிறார். ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த தொகை ரூ.1.40 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்