SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாசில்தார்கள் பணியிடமாற்றம்

5/20/2022 6:23:54 AM

அருப்புக்கோட்டை, மே 20: விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாரராக பணிபுரிந்த லோகநாதன் சிவகாசி தாசில்தாராகவும், சாத்தூர் சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தாராக பணிபுரிந்த பாண்டி சங்கர்ராஜ் அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தூர், மதுரை, தூத்துக்குடி அகலரயில்பாதை இரட்டிப்பு பணி தனி தாசில்தாராக பணிபுரிந்த சாந்தி சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த ஆனந்தராஜ் சிவகாசி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகாசி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சீனிவாசன் ராஜபாளையம் தாசில்தாராகவும், ராஜபாளையம் தாசில்தாராக பணிபுரிந்த ராமச்சந்திரன் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி தாசில்தாராக பணிபுரிந்த ராஜ்குமார் ராஜபாளையம் நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், ராஜபாளையம் நிலஎடுப்பு தனி தாசில்தாராக பணிபுரிந்த ராமநாதன் விருதுநகர் ஆய மேற்பார்வை அலுவலராகவும், விருதுநகர் ஆய மேற்பார்வை அலுவலராக பணிபுரிந்த மகேஸ் சாத்தூர் சிப்காட் நிலஎடுப்பு தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்