மொபட் விபத்தில் தனியார் ஊழியர் பரிதாப பலி
5/19/2022 4:30:32 AM
கோவில்பட்டி: மே 19: கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் மஞ்சு நகரை சேர்ந்தவர் கண்ணன் என்ற சீனிவாசன்(56). இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடம்பூரில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு நேற்று மதியம் மொபட்டில் ஊர் திரும்பினார். அவருடன் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே மடத்துப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ்(52) என்பவரும் வந்தார். கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் கண்ணன் என்ற சீனிவாசன் உயிரிழந்தார். காயமடைந்த சுப்புராஜிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மிரட்டல் வழக்கில் இருவர் கைது
கருங்குளம் கோயிலில் ஐம்பொன் ஐயப்பன் சிலை திருட்டு
தேசிய கொடி பயணத்துக்கு தூத்துக்குடியில் வரவேற்பு
புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லையில் சாலை விபத்து பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு
போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தோணுகால் கிராம மக்கள் மனு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!