SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரம்பரிய உணவு உடலுக்கு ஆரோக்கியமானது கலெக்டர் தகவல்

5/19/2022 4:23:08 AM

திண்டுக்கல், மே 19: திண்டுக்கல் மாவட்டம், கோவிலுார் அருகே உள்ள பனை வெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழா குஜிலியம்பாறை வட்டம், கோவிலூர் ஊராட்சி, கருத்தாக்கப்பட்டியில் நடைபெற்றது. கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்து சங்க உறுப்பினர்களுக்கு இலவச உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் விசாகன் பேசுகையில், ‘‘இன்றைய நவீன காலத்தில் பழங்கால உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறி வருகிறோம். பனை வெல்லம் போன்ற பாரம்பரிய உணவுப்பொருட்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. அதேபோல் இயற்கை விவசாய விளைபொருட்களை பலர் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இது இன்றைய காலத்திற்கு அவசியமானது. வேளாண்மையில் மிகவும் முக்கியமானது விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதுதான். அந்த வகையில் பல்வேறு வகையான விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பனை பொருட்களும் ஒன்று.

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மதுரை மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளனம், மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு நிறுவனம். 26 ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 13 பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. அதில் 3,644 தனி நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஒரு கூறாக பனை மேம்பாட்டு இயக்கம் என்ற அறிவிப்பில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி அளித்திடவும், இலவச உபகரணங்கள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் மேலாண்மை இயக்குநர் கண்ணன், திருநெல்வேலி மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளன மேலாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மதுரை மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் தலைவர் பிரகலாதன், மதுரை மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் மேலாண்மை இயக்குநர் சரவணக்குமார், கதர் கிராமத் தொழில்கள் மதுரை மண்டல துணை தலைவர் அருணாச்சலம், திண்டுக்கல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி, திண்டுக்கல் கதர் முருகேசன், கிராமத்தொழில்கள் உதவி இயக்குநர் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் பாரதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்  தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், கோவிலூர் ஊராட்சித்தலைவர்  செல்வமணி நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்