SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவி தகராறு; கணவர் தற்கொலை

5/19/2022 4:23:01 AM

நிலக்கோட்டை, மே 19: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் வடுகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துச்சாமி(36). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சூரம்மாள்(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  தனபால்(9), சுபஸ்ரீ(3)  என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். முத்துசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துசாமி கோபித்துக்கொண்டு நிலக்கோட்டை அருகே அப்பாவுபிள்ளைபட்டியில் உள்ள  தனது பெரியம்மா வீட்டிற்கு கடந்த மாதம் வந்துவிட்டார்.
இதனையடுத்து தனது கணவரைத் தேடி நேற்று சூரம்மாள் நிலக்கோட்டை வந்தார். அப்போது தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த முத்துச்சாமி வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்