SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி நான்கு வழிச்சாலையில் பைக்கில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு பணம், செல்போன்கள் பறிக்கும் கும்பல்

5/19/2022 4:21:13 AM

நாகர்கோவில், மே 19 : குமரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் லிப்ட் கேட்டு பணம், செல்போன்கள் பறிக்கும் சம்பவம் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் சமீப காலமாக நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து செல்வது போல் சென்று, அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து பணம், செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. காவல்கிணறு - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்றவர்களிடம் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இந்த நான்கு வழிச்சாலையில், இடைப்பட்ட பகுதியில் குமாரபுரம் மட்டுமே முக்கிய சந்திப்பாக உள்ளது. அதன் பின்னர் பெரிய அளவில் கிராமங்கள் இல்லாததால், இந்த வழியாக இரவு நேரங்களில் திருட்டு கும்பல்கள் நடமாடி கைவரிசை காட்டிய வண்ணம் உள்ளனர்.

இதே போல் ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு சாலையிலும் பைக்குகளில் செல்பவர்களை குறி வைத்து கைவரிசை காட்டிய சம்பவங்கள் நடந்துள்ளன. பணம், நகைகளை பறி கொடுத்தவர்கள் உயிர் பிழைத்ததே பெரிது என்ற எண்ணத்தில் இதுவரை பெரிய அளவில் புகார் கொடுக்க வில்லை. ஆனால் காவல்துறையினருக்கு இது தொடர்பான தகவல்கள் வந்து தற்போது போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளையும் எச்சரித்து வருகிறார்கள். இரவு நேரங்களில் பைக்குகளில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தொடர்ந்து இந்த பகுதிகளில் கண்காணிக்கும் வகையில் தற்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். லிப்ட் கேட்டு பணம் பறிக்கும் கும்பலிடம் ஏமாந்த சம்பவங்கள் தொடர்பாக தற்போது சமூக வலை தளங்களிலும் சிலர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தகவல்களை பரிமாறி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்