ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ்: அரசாணை வெளியீடு
5/18/2022 4:37:50 AM
சென்னை: ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, ‘‘ தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடரும் பொருட்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கும் 10ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழும், 10ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சியினை 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 10ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழும் பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி 8ம் வகுப்பு படித்து ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்றும், 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களுக்கு 12ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழும் வழங்கப்படும். ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பயில மட்டுமே இந்த இணை சான்றிதழ் பயன்படும். அரசு வேலைவாய்ப்புக்கு இணை சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது.
மேலும் செய்திகள்
கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ஊராட்சி தலைவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
மீன்பிடி மற்றும் மீனவர் நலன் பல்நோக்கு பண்ணை குட்டைக்கு ஒப்புதல் கலெக்டர் அறிவிப்பு
உளுந்தை, தொடுகாடு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம்
சாலையில் பிறந்தநாள் கொண்டாடியபோது இரு தரப்பினர் திடீர் கோஷ்டி மோதல் திருவள்ளூர் அருகே பரபரப்பு
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...