பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மத்திய மண்டல குறைதீர் கூட்டத்தில் மேயர் அறிவுறுத்தல்
5/18/2022 4:30:57 AM
மதுரை, மே 18: மதுரை மாநகராட்சி மத்திய மண்டல (எண்.3) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகிக்க, துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிசெல்வி முன்னிலை வகித்தனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடந்த குறைதீர் கூட்டத்தில் பெயர் மாற்றம், சொத்துவரி தொடர்பாக 22 மனுக்கள், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 20 மனுக்கள், குடிநீர் இணைப்பு மற்றும் பழுதுகள், சாலை வசதி வேண்டி தொடர்பாக 14 மனுக்கள், கடைகள் ஒதுக்கீடு வேண்டி 6 மனுக்கள் என மொத்தம் 70 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற மேயர், அவற்றை கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இம்முகாமில் உதவி ஆணையாளர் மனோகரன், செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புத்தாய், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிசெயற்ப்பொறியாளர்கள் கனி, அய்யப்பன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
சுதந்திர தின மாரத்தான் போட்டிகள்
1,459 மையங்களில் தடுப்பூசி முகாம்
வங்கி ஊழியர்களின் மாரத்தான்
6 பவுன் நகை வழிப்பறி
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!